“எந்த ஒரு சமூகமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடமுள்ளதை மாற்றமாட்டான்.“ - (அல் குா்ஆன்) 

OFFICE: +94 262236699
Your IP Address:
கிண்ணியா பிரதேச சபை தேர்தலில் முனைச்சேனை வட்டாரத்தில் ஐக்கியதேசிய கட்சி சார்பில் போட்டியிடும் A.H.M பாசித் அவர்களை ஆதரித்து இன்று இரவு முனைச்சேனை சந்தியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் போது

இக்கூட்டத்தில் அப்பகுதி ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

படங்களுக்கு...

28 February 2018
7 February 2018
கிண்ணியா நகர சபை தேர்தலில் பெரியாற்றுமுனை வடாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும்
முன்னால் NAITA மாவட்ட பணிப்பாளர் S.H.M நளீம் அவர்களை ஆதரித்து நேற்று வெள்ளிகிழமை இரவு புஹாரியடி சந்தியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் போது.

இக்கூட்டத்தில் டைசல் நகர் வட்டார வேட்பாளர் கால்தீன், சின்னகின்னியா வட்டார வேட்பாளர் ரபீக், மூதூர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் ராஜீஸ் , ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்..

படங்களுக்கு...

3 February 2018
3 February 2018
Visit for more updates: https://www.facebook.com/imran.mpc
Home | Biography | Political Journey | Mission Statement | On going Projects | Get Involved | News & Media | Press Release | Photo Gallery | Video Gallery | Contact us
Copyrights © 2018 Imran Maharoof Media Unit
Solution By: i-Green Tech Solutions
கிண்ணியா நகர சபை,பிரதேச சபை தேர்தலில் ஐக்கியதேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியாவில் இடம்பெற்ற இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தின்போது

இக்கூடத்தில் திருகோணமலை மாவட்ட ஐக்கியதேசிய கட்சி அமைப்பாளர் சரத்,கிண்ணியா நகர சபை,பிரதேச சபை வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐக்கியதேசிய கட்சிஆதரவாளர்கள் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்த்தின் மூலம் ஐக்கியதேசிய கட்சியின் வெற்றியை உறுதி செய்த கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

படங்களுக்கு...
எல்லைப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்- இம்ரான் எம்.பி

எல்லைப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார். அம்பாறையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கும் பள்ளிவாயளுக்கும் இனவாதிகளால் சேதம் விளைவிக்கப்பட்டது தொடர்பாக இன்று புதன்கிழமை காலை பிரதமரை நேரடியாக சந்தித்து முறையிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,’

மூவின மக்களின் சகவாழ்வை உறுதிபதுத்துவதாக கூறி ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை போன்றே இனவாதிகளை கட்டுபடுத்துவதில் இதுவரை தோல்வி கண்டுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
அம்பாறையில் ஏற்பட்ட சம்பவம் போன்று எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதை புதிதாக சட்டம் ஒழுங்கு அமைச்சராக கடமை ஏற்றுள்ள நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் இந்த சம்பவங்களின் மூலம் அரசியல் லாபாமடைய பலர் முயற்சி செய்து இனவாத பிரச்சாரத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதால் எல்லைப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறான இனவாத செயற்பாடுகள் தொடருமாயின் உள்ளூராட்சி தேர்தலுக்கு பின் பாரிய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கிவரும் நல்லாட்சி அரசுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து இவ்வகையான செயற்பாடுகளை கட்டுபடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு உடன் ஆரம்பிக்க வேண்டும்.

அத்துடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இனம்கண்டு உடனடியாக அவர்களுக்கு’ எதிராகசட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என பிரதமரிடம் முறையிட்டதோடு உரிய நடவடிக்கைகளுக்காக வேண்டி இது தொடர்பான ஆவணங்களும் பிரதமரிடம் சமர்பிக்கப்பட்டது.